நினைத்த பொழுதவ்வளவில் கருவூரார்தாம் நிமைப்பொழுதில் லாடமதில்மையேபூண்டு சினத்துடனே மறையநின்று மன்னர்தம்மை சீரலுடன் பார்குமந்த வேளைதன்னில் சுனைப்படியில் பாண்டியனும் நின்றுகொண்டு சுந்தரனாங் கருவூரார் எங்கேயென்ன தனைப்புகழும் காவலர்கள் அங்கிருந்து தகமையுள்ள சிற்பரிங்கில்லை யென்றாரே |