மாந்தராம் சடலத்தை மெடீநுயென்றெண்ணி மானிலத்தில் வெகுகோடி பாடுபட்டு சாந்தமுடன் தேகமதை நிறுத்தவென்று சதாகாலம் வையகத்திலிருப்பதாக போந்தமுடன் காயாதி கற்பந்தன்னை பொங்கமுடன் உண்டுமல்லோ கற்பங்கொண்டு வேந்தர்களும் இதிகாசவித்தை எல்லாம்வேண்டியே விருப்பமுடன் படித்திட்டாரே |