போச்சென்று விடுகாதே யின்னங்கேளு புதுமையுடன் கண்டவரை யாமுஞ்சொல்வோம் மாச்சலுடன் மோகனங்களறியவேண்டும் மாறாட்டமானதொரு வெழுத்தைப்பாரு கூச்சலின்றி சமாதிதனிலிருந்துமென்ன கோடான கோடியுகங்கண்டுமென்ன மூச்சடங்கி போனபின்பு ஒன்றுமில்லை முனிகோடி தவசிகளு மாண்டார்தாமே |