அச்சென்ற தேகமது நித்யாநித்தம் அப்பனே யாமறிந்த வரைக்குஞ் சொல்வோம் மூச்சடங்கி எனதையர் காலாங்கிநாதர் மூன்றுயுக கோடிவரை சீனந்தன்னில் பேச்சொன்று மில்லாமல் சாமாதிதன்னில் பிணம்போல இருந்தாரே சிலதுகாலம் வாச்சலுடன் வாசிதனையடக்கிக்கொண்டு வையகத்தில் சிலதுநாளா இருந்திட்டாரே |