| கோடியாஞ் சித்தர்களி லொருவருண்டு கவலயத்தில் குருமுடிப்போன் ஒருவருண்டு தேடியே பார்த்தாலும் கிடைப்பதில்லை தேசத்தில் விட்டகுறைநேருமானால் கூடியே அவர்தனக்கு கிட்டும்பாரு கிட்டாவிட்டால் விட்டகுறை யில்லையென்று நாடியே கர்மானுபவத்தினாலே நாட்டமுடன் அறிந்துகொள்ள நீதியுண்டே |