பாரேதான் அண்டபிண்ட மறியவேண்டும் பாரினிலே அண்டமதை யாருங்காணார் நேரேதான் முப்பூவு பார்க்கும்போது நெடிதான அண்டமென்ற கல்தானப்பா கூரான பரதிவினால் உற்பத்தியாச்சு கொடிதான விஷக்கல்லு அண்டக்கல்லாம் சேரேதான் சிற்றண்டம் பேரண்டமாகும் சிறப்பான நடுவண்டமென்னும்பாரே |