கேட்கையிலே சாத்திரமாம் யுகாந்தகால மிருப்பதற்கு வாசிநோக்கு நீட்கமுடன் வாசியிலே இருந்துகொண்டு நீடாழி யுலகத்தை வெறுக்கப்பண்ணி சூட்சமுடன் சின்மயத்தை யறிந்துபோற்றி சுருதியுள்ள கருவிகருணாதியெல்லாம் தாட்கமல பீடமதை பணிந்துபோற்றி சதாகாலம் சமாதியிலே இருக்கநன்றே |