போக்கான காலாங்கி நாதர்பாதம் பொங்கமுடன் யான்வணங்கி சீனதேசம் நோக்கமுடன் காடுமலை வனாந்திரங்கள் நொடிக்குள்ளே சென்றுமல்லோ வேதைபார்த்தேன் தாக்கவே சீனபதி தேசத்தார்கள் சட்டமுடன் எந்தனையும் குருவாயெண்ணி வாக்குடனே குருமொழியாஞ்சீஷனென்று வசனித்தார் கோடியுகம் வசனித்தாரே |