தாக்கவென்றால் கிரதங்கள் லேகியங்கள் தகமையுள்ள செந்தூரம் பற்பம்யாவும் நோக்கமுடன் குளிகைகள் பாடம்யாவும் நுணுக்கமுடன் மாத்திரைகள் கட்டுவகையாகும் சூட்சமுடன் தயிலங்கள் எண்ணைமுதல்யாவும் சுளுவான சூரணங்கள் முதலாடீநு தூக்கமுடன் கடுகளவு பட்டால்போதும் துரையான மருந்தெல்லாம் வீறுமாமே |