பாரேதான் நவதாது முப்பத்திரண்டும் படுமுன்னே சரக்கெல்லாம் மடிந்துகொல்லும் நேரேதான் லவணவகை இருபத்தைந்தும் நேரான கற்பவகை முன்னூற்றுச்சொச்சம் கூரேதான் சொன்னபடி சூட்சமுப்பு குன்றியிடை பட்டாக்கால் எல்லாமாளும் வீரேதான் சரக்குக்கு நெடுங்காலனாகும் மிக்கான துருசுக்கு குருவுமாமே |