கேளென்ற சரீசத்தில் பஞ்சபூதம் கெடியாக இருக்கின்ற தானத்துள்ளே மானென்ற மண்டலத்தில் வர்னமுத்து மனதுள்ளே தரித்துடனே பிராணாதாரம் பானென்ற பதினாறு மூலத்தொட்டு பருவமுடன் பிராணனைத்தான் தரிக்கப்பண்ணி தானென்ற கிரமத்தோடே சஞ்சரிக்கில் தாரணைதான் நாலுவிதம் சாதிப்போராக்கே |