மூலமொடு கரும்பசளை செம்பசளைதானும் முஷ்டியுடன் கருவாகை பெருவாகைதானும் சீலமுடன் பற்பாடம் யிம்புராவும் சிறியாளின் நங்கையொடு பெரியாநங்கை காலமெனும் புளியாரை சிறியாரைதானும் தகமையுள்ள நிலவேம்பு கருவேம்புதானும் பாலமெனும் பொடுதலையாம் சீந்திலோடு பசுமையாப் பொற்சீந்தியாமே |