நிறுத்துகையில் அஷ்டாங்க யோகம்வேண்டும் நிலையான சமாதிதன்னிலிருக்க வேண்டும் பொருந்துமே சிவயோகந்தன்னிற்சென்று போக்கான வாசியைத்தான் நிறுத்தவேண்டும் கலுத்துமே வாத்துமத்தின் நிலையைக்காண கலியுகத்தில் வெகுகால மிருந்தார்தாமும் மறுப்புடனே பிறவியது காணாமற்றான் மாநிலத்தில் மடிந்தவர்கள் கோடியாமே |