கெட்டலைந்து போனவர்கள் கோடாகோடி கெவனமுடன் செடீநுயாதார் கோடாகோடி சுட்டலைந்து போனவர்கள் கோடாகோடி சூட்சமுடன் வயித்தியத்தை காணார்கோடி பட்டலைந்து கெட்டவர்கள் பாடுபட்டு பதமிழந்து போனவர்கள் கோடாகோடி திட்டமுடன் சாத்திரத்தை பாராமற்றான் திடங்குலைந்து நலிந்துபோனார்தாமே |