| உருக்கியே மூசைதனை யுடைத்துப்பாரு உத்தமனே களங்கமது என்னசொல்வேன் நருக்கியே பின்னுமதை மூசையிட்டு நயமுடனே வுருக்கிப்பார் களங்குமாகும் பெருக்கியே களங்கெடுத்து பின்னுங்கேளு பேரான மூசைதனை யுருக்கப்பாரு செருக்கமுடன் களங்கதுவும் என்னசொல்வேன் சிறப்பான போகரது பாகந்தானே |