பாரேதான் குட்டமது பதினெட்டும்போம் பாங்கான சோகையென்ற ரோகம்போகும் நேரேதான் மகோதரங்கள் எட்டும்போகும் நெடிதான விஷபாக மாறும்போகும் சேரேதான் சூலைபதினெட்டும்போகும் செழிப்பான குன்மமென்ற தெட்டும்போகும் நேரேதான் பெரும்பாடு ரோகம்போகும் மேலான கல்லடைப்பு வாரும்போமே |