பாரேதான் தேகமது துள்ளும்போது பாரினிலே ஜெகஜால வித்தையென்பார் நேரேதான் சவமுகத்தில் நிற்கும்போது நெருப்பான தணலதுவு மவிந்துபோகும் கூரான மானிடர்கள் சொல்வதென்றால் குவலயத்தில் ஜெகஜால வித்தையென்பார் தூரேதான் மசானமதிலிருந்துகொண்டு துப்புறவாடீநு சவமதனை பழிசொல்வாரே |