சென்றிட்ட கொங்கணவர் சித்தர்தாமும் சிறப்புடனே சித்தர்முனிதம்மைக்கண்டு வென்றிட்ட சாத்திரத்தை வாதுபேசி விருப்பமுடன் சத்துவகை மிகவும்பேசி கன்றிட்ட கருங்குருவைத் தெரிந்துகொண்டு கருத்துடனே கருமுடிக்க மனதிலெண்ணி பன்றிட்ட சாத்திரத்தை தோஷஞ்சொல்ல பாரினிலே சத்துவகை முடித்தார்காணே |