ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு அருமையுள்ள பாலகனே பின்னுஞ்சொல்வேன் மாச்சலென்ற கற்பமதை வனுபானத்தில் மார்க்கமுடன் பணவிடைதான் கொண்டபோது மேச்சலென்ற மேகமது இருபத்தொன்று மேதினியில் கண்காணாதோடும்பாரு வீச்சலென்ற வீரவீச்சு சன்னிபோகும் வீரமுடன் தாதுவிர்த்தி யதிகமாமே |