யோகமென்றால் போகமதைத் தள்ளவேண்டும் யொருவருடன் வீண்வார்த்தைக் கூறலாகா போகமதை நீக்கிவிட்டு பூமிதன்னில் புகழாக வாசியோகந் தன்னிற்சென்று தாகமுடன் கானப்பால் தன்னைக்கொண்டு சதாகாலம் நிஷ்டையிலே யனுமானித்து வேகமுடன் விட்டகுறை வந்தபோது வெறுப்பன்றி பொறுப்பலுடன் மீள்வீர்தாமே |