கேளேதான் சிலும்புதனில் மூலியுண்டை கிருபையுடன் தான்வைத்து சொல்லக்கேளு பாளேதான் போகாமல் அக்கினியைப்போடு பாகமுடன் சிலும்பிதனைக் குடித்தபோது நாளேதான் நாதாக்கள் சொற்படிக்கு நலமான புகையதுவுங் கபாலந்தன்னில் சூளேதான் புகையதுவும் மேலேநோக்கி சுருக்குடனே லாகிரியைச் காட்டும்பாரே |