ஆச்சேதான் இன்னமொரு வயனஞ்சொல்வேன் அப்பனே ஜெபமுனியாம் ரிஷிகள்தாமும் பேச்சேதான் பேசாமல் சிலதுகாலம் பேருலகில் மண்மீது இருந்திட்டாராம் மூச்சடங்கி சிலகாலம் பிணம்போல்தாமும் மூர்ச்சையது போலிருந்தால் சித்துதாமும் நேச்சலுடன் சமாதிதனிலிருந்தாரென்று நீணிலத்தில் பேராச்சு சிவயோகிக்கே |