யோகத்தை சாதிக்க வெகுகாலந்தான் வுலகத்திலிருந்தாராம் தேகத்தோடே தேகத்தை தான்மறந்து அவருமாண்டார் தேகமது மண்ணோடு மண்ணுமாச்சு போகத்திலிருந்தவரு மாண்டுபோனார் பொங்கமுடன் தேகமது நிலையேயில்லை யாகத்தை செடீநுதுமல்லோ செயமுனிவர்தாமும் யாக்கதனை யொழித்தாரே வுலகில்தானே |