| காணவென்றால் மண்ணுக்கு இறையுமானார் காசினியில் சித்துமுனி ரிஷிகள்தாமும் மாணவே கோடிவரை திரவியங்கள் மகாகோடி நிதிகளெல்லாம் தேடிவைத்து நாணமுடன் பிழைப்பதற்கு வழியுங்கெட்டு நாதாக்கள் காண்பதுவும் அருமையாகும் தோணவே தொல்லுலகில் சாத்திரத்தில் துறைகோடி முறைகளெல்லாம் மறைத்தார்பாரே |