அதிதமாங் கணபதியாம் என்றநாமம் அவனிதனில் மனிதரல்லா வேறொன்றல்ல துதிதமுள்ள கடவுளாயிருப்பாரானால் தொல்லுலகில் வுயிரோடே இருக்காரோதான் பதிதமுள்ள பாடல்களில் சுவாமியென்றும் பாடினார் வெகுகோடி மாந்தரப்பா நிதிதமுள்ள கணபதியின் தேகந்தானும் நிலையாத யனித்திய மென்னலாச்சே |