| ஆச்சப்பா சாத்திரங்கள் சொன்னார்கோடி அவனிதனில் வீரபத்திரன் கடவுளென்று மூச்சடங்கிப் போனதொரு மனிதன்தன்னை முசியாமல் தேவனென்று தொழுதார்பாரு வீச்சலுடன் காசினியில் அவருமாண்டார் விண்ணுலகி மாத்மாவும் போனதென்று ஏச்சான வுறுதிமொழி காணலாச்சே என்மகனே வீரபத்ரன் மண்ணானானே |