பாரேதான் வடிவமுள்ள கன்னிமாரைப்பார்த்தனென்னும் வடிவழகன் மாலையிட்டு நேரேதான் கீர்த்திபிரதாபனாக நெடுங்காலந் தானிருந்தார் தவசிருந்தார் ஊரேதான் பதியிழந்து மண்ணிழந்து வுத்தமனார் துரியனுட தீங்குதன்னால் போரேனாமென்றுரைத்துக் காட்டகத்தில் பொங்கமுடன் பரணைதனிலிருந்தார்தாமே |