என்றான கடாஷத்தால் யோகம்பார்த்து எத்தான ஆசானயோகத்தில்நின்று கன்றான கைநெல்லிக் கனிபோலேதான் கருதியே யோகத்தின் கருத்தறிந்து தின்றான கற்பங்கள் வெகுநாள் தின்று சடமிருக்கக் கற்பாந்தகாலந்தானும் குன்றான வாதமெல்லாம் கூர்ந்துபார்த்து குளிகைகட்டி கெவுனவழி கொண்டிட்டாரே |