பெற்றாரே சிலகாலம் மலைகள்மீது பேருலகில் கீர்த்தியுடன் வாடிநந்திருந்தார் புற்றருகில் சென்றுமல்லோ சித்தர்தாமும் புனிதமுள்ள நவரத்தின பாம்புதன்னை வெற்றியுடன் தான்பிடிக்கப் போகும்போது வேதாந்த சட்டமுனி யங்கிருந்தார் கற்றியே பாம்பாட்டி சித்தர்தாமும் சொரூபமுள்ள சித்தரைக் கண்டார்தாமே |