இருந்திட்டார் வள்ளிதனை சிறையெடுத்து எழிலான கலவதனிலிருந்தாரென்று பொருந்தவே வுலகுதனில் சாமியாக பொங்கமுடன் வீற்றிருந்தார் சதாகாலந்தான் வருந்தியே கோடிமனு பேர்களெல்லாம் வையகத்தில் மகாதேவனென்றுசொல்லி திருந்தியே நமஸ்கரித்து தலைகுனிந்து திகழுடனே கோடியுகமிருந்தார்தாமே |