தொகுத்துநீ பார்க்கவென்றால் வங்கவகைதனிலே சித்தியுள்ள செந்தூரம் சொல்வேன்கேளு வகுத்தபடி வருஷம் நூற்றிருபதும் சென்றுவளமாகநிற்குமந்த வேம்பிடபழத்தை வெகுத்தமுடன் கொண்டுவந்து யிடித்ததில் சாரெடுத்து வெறுப்பில்லாதே விரும்பிவைத்து பகுத்ததிலே இன்னுமொரு பாத்திரத்தில்வாங்கி பாங்காக கருத்தவங்க முருக்கியிதில்சாயே |