உரைத்தாரே முன்னோர்சொல் நூல்களெல்லாம் உத்தமர்கள் பாடிவிட்டார் அனுமாரைத்தான் நிரைத்தாரே தேவனென்றும் கர்த்தனென்றும் நிலையான இதிகாச புராணமெல்லாம் பரைத்தாரே சிரஞ்சீவிப் பட்டமென்றும் பாருலகில் வரம்பெற்ற ஆஞ்சனென்றும் வரைத்தாரே மிருகமென்ற கூட்டந்தன்னை வலுவான மிருகமென்றும் வசனித்தாரே |