போனாரே சாத்திரங்கள் புராணந்தன்னில் புகழான வனுமாரைக் கற்பகாலம் வானோர்கள் முதலான பேர்களெல்லாம் வையகத்தில் சிரஞ்சீவி பட்டம்பெற்றோன் ஏனோதான் வீணாக மாண்டாரென்று எழிலான வார்த்தைதன்னை நம்பாமற்றான் கானான தேவர்முனி ரிஷிகூட்டங்கள் கட்டுரைத்த வாக்கியமும் பொடீநுயாப்போச்சே |