| ஆச்சப்பா காணவென்றா லொன்றுமில்லை அப்பனே கோடானகோடிசெம்பொன் மூச்சப்பா தேகமதை வருந்தியல்லோ முனையான கோடிபொருள் படைத்துமென்ன பேச்சப்பா பேசுமுன்னே வாசியோகம் பேரான மகத்துவங்கள் கொண்டுமென்ன பாச்சலுடன் கூடுவிட்டு கூடுபாடீநுந்து பாருலகில் இருந்தாலும் ஒன்றுங்காணே |