மதிக்கவே சிவவாக்கிய சித்துதாமும் மார்க்கமுடன் மண்மீதிலெழுந்தபின்பு துதிக்கவே பலபேரும் அஞ்சலித்து துறையுடனே மூன்றுமுறை சமாதிசென்று கதிக்கவே யவர்மனது துடிக்கக்கூறி காசினியில் சமாதிதன்னில் பின்னுஞ்சென்றார் பதிக்கவே சிலகாலம் சமாதியிருந்து பட்சமுடன் பின்னுமல்லோ எழுந்தார்பாரே |