சென்றாரே யோர்கடிகை தன்னில்நேரம் செம்மையுடன் கொங்கணரு மறையும்போது நன்றான சீஷவர்க்க மாயிரம்பேர் நலமுடனே கிட்டிருந்து வேதஞ்சொன்னார் வென்றிடவே தேகமது மண்ணால்மூடி மேன்மையுடன் கல்பாறைகொண்டுசாத்தி இன்றுமுதல் ஓராண்டு பூசைமார்க்கம் யருளுடனே நடத்தவென்ன முடிவுமாச்சே |