திண்ணமுடன் சமாதியது வெடித்தபின்பு திறமுடனே யடியேனும் வெளியில்வந்து வண்ணமுடன் வதிசயங்கள் மிகவுண்டாகும் வாகுடனே சிலகால மிருந்துமேதான் நண்ணமுடன் வரும்போது லோகமெல்லாம் நளினமுடன் வதிசயங்கள் தானடக்கும் குண்ணமுடன் நமனாரும் என்னைவந்து கூப்பிட்டுப் போவாரென்று உரைத்தார்தாமே |