பார்த்தேனே சீனபதிதன்னின் மார்க்கம் பாங்குடனே யவ்விடத்தில் சித்துதாமும் தீர்க்கமுடன் நதிமலைகள் சித்துவாடி சென்றுமே சீனபதி கடலோரந்தான் ஏர்க்கவே சமாதியது பூண்டுகொண்டு எழிலாகத்தாமிருந்தார் அனேகம்பேர்கள் மூர்க்கமுடன் ரிஷிதேவர் தேகந்தன்னை மூதுலகில் விட்டுமல்லோ சவமானாரே |