ஆமேதானின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் அப்பனே சட்டமுனியென்ற சித்து தாமேதா னொருவரப்பா சித்துதாமும் தாரணியில் வெகுகாலமிருந்தாரப்பா போமேதான் காவனத்தே வெகுகாலந்தான் பொங்கமுடன் தானிருந்தார் தவத்தில்யாகம் நாமேதான் சொன்னபடி கற்பமுண்டு நாதாந்த சித்தொளிவு மிருந்தார்தாமே |