என்றுமே சட்டமுனி நாதர்தாமும் எழிலாகத்தாமுரைப்பார் சீஷருக்கு தென்றிசைக்கு சிலகாலம் போரேனென்று தேர்வேந்த சீஷருக்கு விடையுஞ்சொல்ல நன்றதென்று சீஷவர்க்க மாயிரம்பேர் நலமுடனே யாம்கூட வருவோமென்று அன்றலுடன் பின்தொடர்ந்தார் மாடீநுகைவிட்டு அடர்ந்துமே பின்தொடர்ந்தார் சீஷர்தாமே |