சித்தான சட்டமுனி நாதர்தாமும் சிறப்புடனே மண்ணதனில் மறைந்தபோது புத்தான மண்ணதுவும் மூடியல்லோ பொங்கமுடன் தான்சமைந்து வளர்ந்திருக்கும் முத்தான பூசையது மிகநடக்கும் மூதுலகில் சட்டமுனி சமாதியென்றும் நித்தமுடன் பூசையது மிகநடக்கும் நேர்மையுடன் அதிசயங்கள் காணலாமே |