காசெடைதான் குருவண்டு உரமுஞ்சூதம் கனமான பழுகோடு புறாவினெச்சில் நேசிதோர் குக்குடத்தின் வெண்மலமுங்கூட நெகிழாமல் அமுரிவிட்டு அரைநாற்சாமம் வாசியதாம் உன்னீரில் கரைத்துக்கொண்டு மறவாமல் அண்டமது மூப்பத்தொன்று தேசியாத வெண்கருவஐக் கூடவிட்டுச் சிறப்பான எருக்கம்பால் சோரைவாரே |