வகுத்திட்ட சீஷருக்கு கமலர்தாமும் வளம்பெறவே ஞானோபதேசம்சொல்வார் தொகுத்திட்ட மலைதனிலே இருந்துகொண்டு தோற்றமுடன் சமாதிக்கு இடமுஞ்சொல்லி பகுத்திட்ட மாகவேதான் சமாதிபூண்டு பட்சமுடன் தாமுரைத்தார் சீஷருக்கு விகுத்திட்ட மாகவல்லோ கமலர்தாமும் பேரான சமாதியிடம் நின்றார்பாரே |