பாரேதான் சமாதியிடஞ் சென்றாரப்பா பான்மையுடன் குழிதனிலே இறங்கிநின்று நேரேதான் கும்பகத்திலிருந்துகொண்டு நேர்மையுடன் கண்ணிரண்டும்மூடியல்லோ சீரேதான் கரங்குவித்து தலைநிமிர்ந்து சிறப்பான நாதாந்த சித்துதாமும் கூரவே கற்பாறைதனையெடுத்து குறிப்புடனே சமாதிதனை மூடிட்டாரே |