மூடிட்ட சமாதிதனி லதிசயங்கள் மூதுலகில் கேட்பதற்கு வளமைசொல்வார் நாடிட்ட நான்வருகும் நாளைதன்னில் நலமான வதிசயங்கள் மிகநடக்கும் பாடிட்ட பார்லோகம் இருண்டுபோகும் பகலிரவு பகலாகத் தோற்றும்பாரு கூடிட்ட மிருகமெல்லாம் ஞானம்பேசும் குறிப்பான பட்சிகள்தான் பேசும்பாரே |