| புத்தியுடன் தானிருந்து சாயுச்சியகாலம் புகழாகத் தாரிணியில் கீர்த்திபெற்று சத்தியத்துக் கோர்நாளுந் தவறில்லாமல் சட்டமுடன் மேதினியி லிருந்துகொண்டு நித்தியமுஞ் சதாகாலம் குருவைப்போற்றி நீதியுட னிஷ்டையிலே தானிருந்து முத்தியுடன் நாற்பதவி பெறவே வேண்டும் மூதுலகில் இருக்கவென வரைந்திட்டாரே |