வசனித்த சொற்கேட்டு வடியேன்தானும் வையகத்தில் வெகுகோடிசித்துவாடி தசமுடனே பத்துயுக மிருக்கவென்று தாரிணியில் காலாங்கி தம்மிடத்தில் நிசமான குளிகையது பெற்றுக்கொண்டு நேர்மையுடன் உபதேசம் மிகவுங்கேட்டு குசமுடனே யட்டதிசை சொல்லவென்று கொப்பெனவே வுபதேசம் பெற்றேன்பாரே |