கூறவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் குவலயத்தில் எந்தனது குருவாநாதர் தேறவே காலாங்கிநாதர் தாமும் தெளிவுடனே எந்தனுக்கு வுரைத்தவண்ணம் மாறவே ராமரென்னும் பெயர்தான்கொண்ட மகத்தான யோக்கோபு சித்துதாமும் ஆறவே சிலகாலம் பூமிதன்னில் அனேகவண்ணம் அதிசயங்கள் செடீநுதிட்டாரே |