ஓதியே சிலகால மங்கிருந்து வுத்தமனார் யாக்கோபு முனிவர்தாமும் நீதியுடன் சமாதிக்குப் போகவெண்ணி நித்திலங்குஞ் சீடனைத்தான் மனதுநோக்கி சாதியுடன் மறப்புள்ளோரெல்லாம் தம்மை சட்டமுடன் தான்மறந்து சமாதிக்கேக ஜோதியுட பரவொளியைக்காணவென்று சுத்தமுடன் மனந்தனிலே எண்ணினாரே |