பொன்னான மழைமாரிப் பொழியும்போது பொங்கமுடன் பூமிக்குள் இடியுண்டாகும் சின்னமுடன் சமாதிதனில் கோஷ்டந்தானும் திறமுடனே பூமிதனில் கேட்கும்பாரு மன்னவர்கள் ராசாதிராசரெல்லாம் மானிலத்தில் திசைமாறி போவார்கண்டீர் துன்னவே சஊரியாள் சந்திராளும் துறைகாணார் திசைதனிலே நிற்பார்தாமே |